பெயிண்டர் வெட்டி கொன்ற வழக்கு - போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய 2 ரவுடிகளின் கால் முறிவு..!

0 3482

சேலம் அருகே முன்விரோதம் காரணமாக பெயிண்டரை வெட்டி கொன்ற வழக்கில் கைதான இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொட்டில் பட்டியைச் சேர்ந்த ரகுநாதன் என்பவரை, மருத்துவமனை புகுந்து மர்மகும்பல் சரமாரி தாக்கி வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து வழக்குபதிந்த மேட்டூர் போலீசார், வெள்ளையன் மற்றும் மூர்த்தி, பிரகாஷ், நிவேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி மூர்த்தி மற்றும் வெள்ளையன் ஆகியோர் போலீசாரின் பிடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, காலில் முறிவு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments