பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

0 2273
எந்த வித நெருக்குதலுக்கும் அடிபணியாத சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவில் பல சிறந்த மாற்றங்கள் நிகழ்வதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில்  உரை நிகழ்த்திய அவர், இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது என்று கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறிய அவர், எந்த வித நெருக்குதலுக்கும் பணியாத வெளியுறவுக் கொள்கையை மோடி தலைமையிலான இந்தியா கொண்டிருப்பதாகக் கூறினார்.

பிரதமர் மோடி நாட்டுப்பற்று மிக்கவர், மேக் இன் இந்தியா மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் இந்தியாவின் முன்னேற்றமும் வளர்ச்சியும் அனைவரின் மரியாதைக்கு உகந்தது என்றும் புதின் புகழாரம் சூட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments