7ம் வகுப்பு மாணவனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்ற மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

0 1636

சென்னையில் 7ம் வகுப்பு மாணவனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பைனான்ஸ் தொழில் செய்து வரும் அரவிந்த் ஷர்மா என்பவரது மகன் மித்திலேஷ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.

நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், மித்திலேஷை வழக்கமாக வீட்டுக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன், மற்ற மாணவர்களை அழைத்து வரச் சென்ற சமயத்தில், ஆட்டோவில் வந்த மர்ம நபர் மித்திலேஷை கடத்திச் சென்றுள்ளார்.

ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நிற்கும் போது கீழே இறங்கி தப்பித்த சிறுவன், மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் சென்று போலீசாரிடம் தஞ்சமடைந்துள்ளான்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுவனை கடத்தியது நபர் யார்? கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments