சைதாப்பேட்டையில் திருடுபோன இருசக்கர வாகனம்.. கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொரு நபருக்கு பெயர் மாற்றம்..!

0 5605

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதராஜ் என்பவர், கடந்த மாதம் 6-ந் தேதி திருடுபோன தனது இருசக்கர வாகனம்  கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில், அமீர் அப்பாஸ் என்பவருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

தனது பல்சர் பைக்கின் ஆவணங்கள், திருடுபோன இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் என அனைத்தையும் சமர்பித்தபோதும், குமரன் நகர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.சி புக் மற்றும் தனது கையெழுத்து இல்லாமல் வாகனம் எப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது என கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததாக தெரிவித்த அமுதராஜ், வாகனத்தை மீட்டு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments