52 வயது பெண்ணை கொன்று விழுங்கிய 16 அடி நீள மலை பாம்பு

0 2499

இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்று விழுங்கியது.

ஜாம்பி மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண், கடந்த வாரம் ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.

பெண்ணின் உறவினர்கள் ரப்பர் தோட்டத்தில் அவரை தேடிய போது, அங்கு 16 அடி நீள மலைப்பாம்பு வயிறு வீங்கிய நிலையில் இருந்துள்ளது.

அந்த பாம்பு ஜஹ்ராவை விழுங்கியிருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள், பாம்பைக் கொன்று அதன் வயிற்றைக் கிழித்து பார்த்த போது பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments