விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம்.. சென்னையில் தலைமறைவாக இருந்த உணவக உரிமையாளர் கைது..!

0 1693

ஸ்ரீபெரும்புதூரில், நட்சத்திர உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 21ந் தேதி, சத்தியம் கிராண்ட் ரிசார்டின் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது,3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

உணவக மேலாளர், ஒப்பந்ததாரர் இருவரும் அன்றே கைதான நிலையில், உரிமையாளர் சத்தியமூர்த்தியை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments