நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியை, மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு

0 10877

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற மருத்துவமனையின் பெயரை தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தேனாம்பேட்டையில் மனநல சேவை மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர், 14416 என்ற மனநல உதவி எண்ணை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடும் கட்டுப்பாடுகளுடன் புதிய சட்டம், வரும் நவம்பர் முதல் அமலுக்கு வரும் என்றார்.

மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியை, மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் நாகரீகமாக செயல்படுமாறு, செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments