'பயர் ஹேர்கட்' சிகை அலங்காரத்தின்போது நேர்ந்த தீ விபத்து..!

0 2545

குஜராத்தில், fire haircut முறையில் சிகை அலங்காரம் செய்ய முயன்றபோது நேர்ந்த விபத்தால் இளைஞர் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மை காலமாக, நெருப்பை பயன்படுத்தி செய்யப்படும் fire haircut இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாபி நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ”fire haircut” செய்தபோது, தலையில் தடவப்பட்ட ரசாயனங்கள் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்தன.

நெருப்பை அணைப்பதற்குள் அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது தலையில் என்ன ரசாயனம் தடவப்பட்டது என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments