மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் கைது..! வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதை கேட்காததால் வெறிச்செயல்

0 4006

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதை மனைவி கேட்காத ஆத்திரத்தில், அவரை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த சாமிநாதன் - பிரேமா தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், திருப்பூர் சென்று அங்கு தங்கி வேலை பார்த்து வந்த பிரேமா, தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

பண்டிகை முடிந்ததும் மீண்டும் திருப்பூர் செல்வதாக பிரேமா கூறிய நிலையில், திருப்பூர் செல்ல வேண்டாம் என சாமிநாதன் கூறியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சாமிநாதன், காய்கறி வெட்டும் கத்தியால் 12 இடங்களில் பிரேமாவை சரமாரியாக குத்தியதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments