ஓசி பீருக்காக கையில் வெட்டரிவாளுடன் பாருக்குள் போர்..! கல்லால் அடித்து வீழ்த்தினர்

0 2877

நெல்லையில் ஓசியில் பீர் கொடுக்காத ஆத்திரத்தில் ஸ்கூல் பேக்கில் வெட்டரிவாளை மறைத்து எடுத்து வந்து பாருக்குள் ரகளை செய்த ரவுடி கல்லால் அடித்து வீழ்த்தப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ் இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தி கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ரவுடி கிருஷ்ணகுமார் , ரஞ்சித்பீட்டர்,  பிரபாகரன் , லிங்கேஷ் ராஜா ஆகிய நான்கு பேர் அவரிடம் ஓசியில் பீர் வாங்கிக் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

கிருஷ்ணகுமார் கும்பல் ஏற்கனவே போதையில் இருந்ததால் அவர்களை சத்தம் போட்டு அங்கிருந்து போகக்கூறி உள்ளார் மாரிராஜ். ஓசி பீர் கிடைக்காத ஆத்திரத்தில் கிருஷ்ணகுமார் ஸ்கூல் பேக்கில் மறைத்து எடுத்து வந்த வெட்டரிவாளை எடுத்து மாரிராஜை தாக்கியதோடு, கையில் அரிவாளுடன் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து கடும் ரகளையில் ஈடுபட்டார்.

கண்ணில் பட்ட பார் ஊழியர்களையும் மது அருந்த வந்தவர்களையும் அரிவாளால் வெட்டினார், பலர் மேஜை உள்ளிட்ட பொருட்களை வைத்து தடுத்ததால் உயிர் தப்பினர்.

தனது கூட்டாளியிடம் ஸ்கூல் பேக்கை கொடுத்து விட்டு மீண்டும் பாருக்குள் ஒரு ரவுண்டு விட்ட கிருஷ்ணகுமார் மீது பார் ஊழியர்கள் கல்லை தூக்கி வீசியதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்ததால் அரிவாளை கீழே போட்டு சாய்ந்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கிருஷ்ணகுமார், மாரிராஜ் மற்றும் பார் ஊழியர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரிவாளுடன் இவ்வளவு சேட்டைகளையும் செய்த கிருஷ்ணகுமார் போதை தெளிந்ததால் என்ன நடந்தது என்றே தெரியாதது போல மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார்.

மருத்துவமனைக்குள் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments