20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி வெட்டிக்கொலை..!

0 2050

தஞ்சையில் பிரபல ரவுடியை, திட்டம் போட்டு வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்த 5 பேரை, போலீசார் கைது செய்தனர். பொந்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் வெளியூரில் இருந்த இவர், தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர் திரும்பினார்.

சாமிநாதன் ஊரில் இல்லாததால், லாலி நகரை சேர்ந்த ஹரிஹரன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, ரவுடிசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சாமிநாதன் திரும்ப வந்ததால், தங்களின் தொழில் பாதிக்கும் என எண்ணி, ஹரிஹரன் தனது நண்பர்களுடன், அவரின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தங்களது திட்டத்தின் படி, அரிவாளுடன் ஹரிஹரன் வீட்டிற்கு சென்ற சாமிநாதனை, ஐந்து பேரும் சுற்றிவளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments