பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

0 2281

சென்னை பெரியமேடு மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகங்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடந்த மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் இயங்கி வந்த அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலவங்களுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், பெரியமேட்டில் இயங்கிய கிளை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதேபோன்று கடையநல்லூர் புளியங்குடியில் இருந்த அலுவலகத்திற்கும் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல்வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments