போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

0 2040

திருச்சியில் போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரியும் அழகரசு என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த 2010 முதல் 2016ம் வரையிலான காலக் கட்டத்தில் வருமானத்திறகு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து குவித்ததாக, அழகரசு மீதும் அவரது மனைவி ராணி மீதும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், அழகரசுவின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments