பிலிஃப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 26 பேர் காயம்..!

0 1799

பிலிஃப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்திற்கு 26 பேர் காயமடைந்தனர். அப்ரா மாகாணத்தின் லகாயன் நகருக்கு 9 கி.மீ வடமேற்கே ஏற்பட்ட இந்த நில நடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்க அதிர்வுகள் லுஸான் பகுதி, மணிலா பெருநகரப் பகுதி உள்ளிட்ட 400 கிலோ மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டன.

சில வினாடிகளுக்கு நீடித்த நில நடுக்கத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

நில நடுக்கத்தால் லாவோக்கிலுள்ள சர்வதேச விமான நிலையம், பட்டாக் நகரத்தில் உள்ள மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments