ஏ.டி.எம் இயந்திரத்தில் போலி ரூ.200 நோட்டுகள் - அதிர்ச்சியடைந்த மக்கள்..!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 200 ரூபாய் போலிநோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.
அமேதியைச் சேர்ந்த ஒருவர் ஏடிஎம்-மில் பணம் எடுத்தபோது, புதுநோட்டுகளாக வந்த 200 ரூபாய் தாள்கள் வித்தியாசமாக இருந்துள்ளன.
ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்றும், ஃபுல் ஆஃப் ஃபன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பணம் எடுக்க வந்த சிலருக்கும் இதேமாதிரியான போலி ரூபாய் நோட்டுகள் வரவே, அதிர்ந்துபோன மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Comments