ஹெல்மெட்டுக்கு அபராதம் செலுத்த மறுத்து அடம் பிடித்த தலைமை செயலக ஊழியர்..!

0 13007
ஹெல்மெட்டுக்கு அபராதம் செலுத்த மறுத்து அடம் பிடித்த தலைமை செயலக ஊழியர்..!

சென்னை நந்தனத்தில் ஹெல்மெட் அணியாதவருக்கு லிப்ட் கொடுத்த பாவத்துக்கு, ஹெல்மெட் அணிந்து வந்தவர்  போக்குவரத்து போலீசிடம் சிக்கி 1000 ரூபாய் அபராதம் செலுத்தியதாக ஆதங்கம் தெரிவித்த நிலையில் தலைமை செயலக ஊழியர் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அபராதம் செலுத்தாமல் சென்றார்.

புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் படி ஹெல்மெட் போடாதவர்களிடம் 10 மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வாகன ஓட்டி ஒருவர் , ஹெல்மெட் அணியாத நபருக்கு லிப்ட் கொடுத்ததால் 1000 ரூபாய் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. 

சென்னை திருவல்லிக்கேணியில் பெட்ரோல் டேங்கில் ஹெல்மெட் வைத்தபடி பயணித்த தலைமை செயலக ஊழியர் அபராதம் செலுத்த மறுத்து ஐடி கார்டை காண்பித்ததோடு நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிச்சென்றார்

சிபாரிசுக்கு மேலும் இருவரை அழைத்து வந்த அவரிடம், செகரட்டரியேட் ஊழியர் என்றால் ஹெல்மெட் போடாமல் வரலாமா ? என்று நயமாக கேட்ட போலீசார் , அபராதம் வாங்காமல் நைசாக அனுப்பி வைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றவரிடம் ஹெல்மெட் அணியாததால் 1000 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் சிகிச்சைக்கான பணம் அபராதமாக பறிகொடுத்ததாக வேதனை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments