மனைவியை பின் தொடர்ந்ததால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டுக்காரர், அவரது பெற்றோரை சுட்டுக்கொலை செய்த கணவன்..!

0 2607

மத்திய பிரதேசத்தில், தனது மனைவியை தொந்தரவு செய்த நபரையும், அவரது பெற்றோரையும் சுட்டுக்கொன்ற கணவனை கைது செய்த போலீசார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

கடந்த திங்களன்று, தாமோவின் தேவ்ரான் கிராமத்தில் வசிக்கும் ஜக்தீஷ் படேல் என்பவரின் மனைவி, அண்டை வீட்டில் வசித்த Manak Ahirwar என்பவர், தன்னை பின்தொடர்வதாகவும், பார்த்து தொந்தரவு செய்வதாகவும், கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஆத்திரம் தீராத ஜக்திப் படேல், நேற்று காலை தனது குடும்பத்தினர் 5 பேரை அழைத்து சென்று, Manak Ahirwar, அவரின் இளைய சகோதரர் மற்றும் அவரது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், Manak Ahirwar-ன் சகோதரர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற மூவரும் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments