புதைக்கப்பட்ட இடத்தில் சிறுமியின் தலை மட்டும் மாயம்.. மதுராந்தகத்தில் திகில்…

0 3007

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து தலை மட்டும் மாயமானதாக கூறப்படும் விவகாரம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவாடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் - நதியா தம்பதியின் மூத்த மகள், அவிரிமேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, 7-ம் வகுப்பு  படித்து வந்த நிலையில், மின்கம்பம் சாய்ந்த விபத்தில் கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார்.

சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், வருவாய்த்துறையினர், சடலத்தை தோண்டி பார்த்தபோது, தலை மட்டும் மாயமானது தெரியவந்தது. சிறுமியின் சடலம் உடற்கூராய்வுற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments