அதிமுக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு.. வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்..!

0 2407

தாம்பரம் அடுத்த சேலையூரில் கஞ்சா போதையில் வீடு புகுந்து அதிமுக பிரமுகரையும், அவரது குடும்பத்து பெண்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு 11 மணியளவில் அதிமுக பிரமுகரான சங்கர்,தனது வீட்டின் வாசல் அருகே நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அரிவாளால் அவரை தாக்கியுள்ளனர்.

சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, காப்பற்ற வந்த அவரது மகளை கையில் வெட்டியதோடு, மனைவி மற்றும் தாயையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்த சங்கரின் மகள் உட்பட 4 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments