ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்தில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா?கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? நீதிபதிகள் காட்டம்

0 2786

ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்தில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தொடுத்த வழக்கு, விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், உடனடி நடவடிக்கை மேற்கொண்டால், இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்து, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments