இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம், தேவரின் தங்க கவசத்தை, வங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 2241

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு தங்க கவசத்தை எடுத்து செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேவர் நினைவகப் பொறுப்பாளருக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியிலிருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்கக்கோரி திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், இந்த விவகாரத்தால் காலம் காலமாக நடந்து வரும் சடங்குகள் தடைப்படக்கூடாது என்றும் தெரிவித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் மாவட்ட வருவாய் அலுவலர், முத்துராமலிங்க தேவர் நினைவாக பொறுப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குவதாகவும், தங்க கவசத்துக்கு ராமநாதபுரம் எஸ்பி தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments