மதுபான பாருக்குள் புகுந்து தீபாவளி பணம் கேட்டு பீர் பாட்டில்களை வீசி மிரட்டிய கும்பல் அரெஸ்ட்

0 4275

தஞ்சை கீழவாசல் பகுதியில், மதுபான பாரில் பணம் கேட்டு, பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழவாசல் ஏ.ஒய்.ஏ நாடார் சாலையில் அமைந்துள்ள மதுபான பாருக்கு வந்த 3 பேர், தீபாவளிக்கு பணம் கேட்டு உரிமையாளர் மற்றும் பார் ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மூவரும், பாருக்குள் பீர் பாட்டில்களை வீசியும், இரும்புத்தகடுகளை சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மூவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments