சொத்து, கடனை பிரிப்பதில் அண்ணன் - தம்பி இடையே தகராறு.. தடுக்க வந்த தாயை தடியால் அடித்துக் கொலை..!

0 3681

கள்ளக்குறிச்சி அருகே சொத்துத் தகராறின் போது, தாய் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், இரு மகன்கள், மருமகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேலம்மாள் என்பவருக்கு சுரேஷ்குமார், வேல்முருகன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வேலம்மாளுக்கு சொந்தமான 1 ஏக்கர் 80 சென்ட் நிலத்தையும் 16 லட்சம் ரூபாய் கடனையும் சரி சமமாக பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கடந்த 24ம் தேதி இரு மகன்களின் குடும்பத்தாரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது தடுக்க வந்த தாயை மூத்த மகன், தடியால் தலையில் பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மூத்த மகன் சுரேஷ்குமார், அவரது மனைவி மற்றும் மைத்துனர் கொலை வழக்கிலும், இளைய மகன் வேல்முருகன் கொலை முயற்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments