கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு - என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை

0 2891
கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு - என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை என்ஐஏ-க்கு மாற்ற, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், கோவை சம்பவம் குறித்தும், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் பாதுகாப்பை உறுதி செய்ய 3 புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், இதுபோன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, காவல்துறையில் சிறப்புப்படை பிரிவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments