குப்பையில் வீசப்பட்ட வைரக்கம்மலை துப்புறவுப் பணியாளர்கள் உதவியுடன் மீட்டுக் கொடுத்த குடியாத்தம் நகரமன்ற தலைவர்

0 3192

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குப்பையில் வீசப்பட்ட வைரக்கம்மலை துப்புறவுப் பணியாளர்கள் உதவியுடன் குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தரராஜன் மீட்டுக் கொடுத்துள்ளார்.

பலமனேரிசாலைப் பகுதியில் வசிக்கும் கல்பனா என்பவர் தீபாவளி நோன்பு பூஜையில் நகைகளை வைத்து பூஜை செய்துள்ளார். இன்று காலை நகைகளை காணாமல் தேடிய நிலையில், பூஜை அறையை சுத்தம் செய்த போது 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர கம்மலையும் சேர்த்து குப்பையில் கொட்டியது தெரியவந்துள்ளது.

உடனே நகராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், குப்பை அள்ளிச் சென்ற வாகனம் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு கம்மலை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments