இருசக்கர வாகனத்தை வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற வாலிபர்

0 2739

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனத்தை, வாங்குவது போல் நடித்து, திருடிச் சென்ற வாலிபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

செட்டிகுளம் பகுதியில் சந்தோஷ் ராஜ் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவரின் கடைக்கு நேற்று இருசக்கர வாகனத்தை விலைக்கு வாங்க வந்த வாலிபர் ஒருவர், வாகனத்தை ஓட்டிபார்க்க வேண்டும் என கூறி, வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த நபர் திரும்பி வராததால், சந்தோஷ்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments