ரத்த பிளாஸ்மாவுக்கு பதில் டெங்கு நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றி சர்ச்சையில் சிக்கிய தனியார் மருத்துவமனையை இடிக்க முடிவு

0 2533

உத்தர பிரதேச மாநிலத்தில் ரத்த பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸை ஏற்றி டெங்கு நோயாளி உயிரிழந்த விவகாரத்தால் சீலிபட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

பிரயாக்ராஜில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நடைபெற்ற இச்சம்பவத்தை அடுத்து, மருத்துவமனை சீலிடப்பட்டு மூடப்பட்டது. 

இந்நிலையில், சட்டவிரோதமாக மருத்துவமனை கட்டப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அதை இடிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், 28ம் தேதிக்குள் மருத்துவமனையை காலி செய்யும்படியும் பிரயாக்ராஜ் நகர மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments