கார் கழுவும் இடமாக மாறிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம்?

0 2317

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம், கார் கழுவும் இடமாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இம்மருத்துவமனையில் அரசு சார்பில், ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவர், பாதுகாவலரிடம் பணம் கொடுத்து தனது காரை சுத்தப்படுத்தச் சொன்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  தாய் - சேய் மகப்பேறு மருத்துவமனையின் முன்பாக, பாதுகாவலர் காரை கழுவிக் கொண்டிருந்ததை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments