அரசு மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு… பரபரப்பு சிசிடிவி காட்சி

0 2942

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் புகுந்து, இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தொட்டில் பட்டியை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரகுநாதன், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல், மருத்துவமனையிலேயே வைத்து ரகுவை சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்த நிலையில், வெள்ளையன், மூர்த்தி ஆகிய இருவருக்கும் போலீசார் துரத்தியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments