மியா மியூசியம் நடத்திய இரண்டு பேர் மீது சட்டவிரோத செயல்கள் வழக்கு - அருங்காட்சியகம் மூடி சீல் வைப்பு..!

அஸ்ஸாமில் மியா மியூசியம் என்ற பெயரில் மியா இன முஸ்லீம்களுக்கான அருங்காட்சியகத்தை நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அருங்காட்சியக வளாகத்தை தீவிரவாத செயல்களுக்காகப் பயன்படுத்தினரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மோஹர் அலி, அப்துல் பட்டன் ஆகியோரிடம் அல்கொய்தா மற்றும் வங்காள தீவிரவாத இயக்கத்துடன் உள்ள தொடர்பு குறித்த விசாரணை நடத்தப்படுகிறது.
அஸ்ஸாமின் கோபாலபுரா மாவட்டத்தில் தனியார் அருங்காட்சியகம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதில் மியா இனத்தவரின் பாரம்பரியத்தை விளக்கும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.ஆனால் மாவட்ட நிர்வாகம் இப்போது அந்த அருங்காட்சியகத்தை மூடி சீல் வைத்துள்ளது.
Comments