வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் வார்த்தைகளை ஜமேசா முபீன் வைத்தது ஏன்..? அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி

0 6187

கோவையில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, காரில் சிலிண்டர் வெடித்தது, தற்கொலை தாக்குதல்தான் என்பதற்கு, ஜமேசா முபினின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இருந்த ஐஎஸ்.ஐஎஸ் குறுந்தகவலே ஆதாரம் என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, காரில் சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜமேசா முபின் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைவரா? என போலீசாரால் விசாரிக்கப்பட்டவர் என்றும், 55 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜமேசா முபின் தனது வாஸ்ட் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த வாசகங்களை சுட்டிக்காட்டி, ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பில் உள்ளவர்கள் வைப்பது போன்ற தகவலை ஆதாரமாக கொண்டு, இது, தற்கொலைப்படை தாக்குதல் என சுட்டிக்காட்டினார் அண்ணாமலை.

ஜமேசா முபின் காரில் இருந்து இறங்கி, சிலிண்டரை சரிசெய்தபோது, அது வெடித்துச்சிதறியதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இதில் தொடர்புடைய மேலும் 8 பேர் மீது ஏன்? இன்னும் வழக்கு போடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம், தமிழக உளவுத்துறையின் தோல்வி என்றும், நல்ல திறமை வாய்ந்த உளவுப்பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டதால், முன்கூட்டிய இதுகுறித்து தகவல் போலீசாருக்கு தெரியவரவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments