பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனாக்..!

0 2349
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்று கொண்டார். இதன்மூலம் அப்பதவியை ஏற்கும் முதல் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்துமதத்தினர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்று கொண்டார். இதன்மூலம் அப்பதவியை ஏற்கும் முதல் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்துமதத்தினர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

போரிஸ் ஜான்சன் பதவி விலகலுக்குப்பின், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ், தொடர் நெருக்கடிகளால் 44 நாள்களிலேயே ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கு போரீஸ் ஜான்சன், ரிஷி சுனாக், பெண் எம்பி பென்னி மார்டண்ட் ஆகிய 3 பேர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போரீஸ் ஜான்சன், பென்னி மார்டண்ட் ஆகியோர் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததால், கன்சர்வேடிவ் கட்சி தலைவராக ரிஷி சுனாக் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பக்கிம்காங் அரண்மனையில் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸை ரிஷி சுனாக் இன்று சந்தித்தார். அப்போது அவரை முறைப்படி, நாட்டின் பிரதமராக மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார்.

இதையடுத்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற அவர், பின்னர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வெளியே இருந்து, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர், பிரிட்டன் நாடு பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், ஆதலால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஸ்திரப்படுத்துவதற்கும் தாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க போவதாகவும் கூறினார். சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

42 வயதாகும் ரிஷி சுனாக், பிரிட்டனின் 57 ஆவது பிரதமராவார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மேலும் இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் நிறுவனத்தின் அதிபர் நாராயணமூர்த்தியின் மருமகனும் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments