செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி விரைவு ரயில் சேவை தொடக்கம்..!

0 2559

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பச்சை கொடி காட்டப்பட்டு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில்,  மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு  9.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.

மறு மார்க்கத்தில்  செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை  5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.   

25 ஆண்டுகளுக்குப் பிறகு  மயிலாடுதுறைக்கு முதல் முறையாக  ரயில் செல்வதால், பயணிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments