பிரிட்டன் பிரதமராக இன்று பதவியேற்கிறார் ரிஷி சுனக் உலக தலைவர்கள் வாழ்த்து

0 2623

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிசி சுனக் இன்று பதவியேற்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ் டிரஸ், தொடர் நெருக்கடிகளால் பதவியேற்ற 44 நாள்களில் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சன், கன்சர்வேடிவ் கட்சி மூத்த தலைவர் ரிசி சுனக், பெண் எம்பி  பென்னி மார்டண்ட் ஆகிய 3 பேர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போரீஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டண்ட் ஆகியோர் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததால், கன்சர்வேடிவ் கட்சி தலைவராக ரிசி சுனக் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பக்கிம்காங் அரண்மனையில் பிரிட்டன் அரசர் சார்லஸை ரிசி சுனக் இன்று சந்தித்து பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பிரதமராக ரிசி சுனக்கை சார்லஸ் முறைப்படி நியமிப்பார்.

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக இன்று மதியம் ரிசி சுனக் பதவியேற்கவுள்ளார்.

பின்னர் மாலை 4 மணியளவில் அவர், பிரிட்டன் மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

42 வயதாகும் ரிசி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

அவர், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும்பட்சத்தில் அந்நாட்டின் முதல் இந்து பிரதமர் எனும் பெருமையைப் பெறுவார்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments