காதலியை பார்க்க மறுப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்த காதலன்..!

0 7186

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் நள்ளிரவில் காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்து ரகளையில் ஈடுபட்ட காதலன் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவரான ரஞ்சித், கல்லூரி மாணவியை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சில மாதங்களாக அவர் ரஞ்சித்தை பார்ப்பதை தவிர்த்து நிலையில் நேற்று இரவு என்ஜிஓ காலனியில் உள்ள காதலியின் வீட்டிற்கு ரஞ்சித் வந்துள்ளார்.

மகளை பார்த்து பேச சீனிவாசன் அனுமதி மறுத்த நிலையில் ரஞ்சித் அவரை தாக்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ரஞ்சித்தை விரட்டியடிக்க முயற்சி செய்தபோது, மாடி அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் ரஞ்சித்திடம் சமாதானமாக பேசி காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments