சோழர் கால 2 பழங்கால சாமி சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு..!

0 2976

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்திய 2 சாமி சிலைகள், அமெரிக்க  அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில்  சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலையும் இருப்பதையும்,   2011 ஆம் ஆண்டு  98,500 டாலருக்கு  விற்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்த போலீசார், அதை  தமிழகத்திற்கு கொண்டு வரத் தேவையான  ஆவணங்களை மாநில அரசிடம் சமர்பித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments