கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது.!

0 3196

கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் மாருதி காரில் சிலிண்டர் வெடித்ததில் ஜமீசா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்ஹா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதிகளான ஒப்பணக்கார வீதி, உக்கடம், காந்திபுரம், கிராஸ் கட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய துணை ராணுவத்தினரும் பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments