சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு - மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

0 3051
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு - மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடிக்கப்படுவதால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை சென்னையில் காற்றில் நுண்துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில், இன்று மாலை 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் காற்றின் தரம் பாதுகாப்பான நிலையில் இருந்து,மோசமான நிலைக்கு மாறியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

மேலும், மணலி, ராயபுரம், வேளச்சேரி பகுதிகளில் காற்றின் தரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments