தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 15,000 பேரிடம் ரூ.10 கோடி மோசடி- மேலாளர்கள் இருவரை கைது செய்த போலீசார்..!

0 4820

திருவள்ளூரில், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் மேலாளர்கள் இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 8 பேரை தேடிவருகின்றனர்.

மாலந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜே.பி.ஜோதி என்பவர், மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக கூறி தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். 

மாவட்டத்தின் பல பகுதிகளில் பல்வேறு முகவர்களை நியமித்து, சுமார் 15 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் தீபாவளி சீட்டாக 10 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்கிய நிலையில், பொருட்கள் வழங்காதது குறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது, சில நாட்களில் தருவதாக கூறி அனைத்து ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகளையும் மூடி தலைமறைவாகியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments