திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நாடக கலைஞர் கைது..!

0 4887

சென்னையில், திருமணம் செய்வதாகக்கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நாடக கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒப்பனை கலைஞருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற நாடக கலைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராகுல் சிராஜ், அவரை காதல் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொழில் தொடங்குவதாகக் 10 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளதாகவும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் இளம்பெண் போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீசார் ராகுல் சிராஜை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments