காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - பழனிசாமி..!

0 2681

கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன பதிலளிக்க உள்ளார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறையை தி.மு.க. அரசு சுதந்திரமாகவும், சட்டத்தின்படியும் செயலாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

மேலும், அவை தற்செயலாக சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது சதி வேலையா? என போலீசார் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments