பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கு, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தந்த தரமான பதில் இணையதளத்தில் வைரல்..!

0 6596
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கு, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தந்த தரமான பதில் இணையதளத்தில் வைரல்..!

டுவிட்டரில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு, கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதிலளித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்த சுந்தர் பிச்சை, நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து, பண்டிகையை கொண்டாடியதாக தெரிவித்தார்.

அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தாங்கள் முதல் 3 ஓவர்களை பார்க்க வேண்டும் என, இந்திய வீரர்கள் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி பதிவிட்டார்.

அதற்கு சுந்தர் பிச்சை, ஆமாம் பார்த்தேன், இந்திய வீரர்கள் அர்ஷதீப், புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வானை ஆட்டமிழக்க செய்ததாக குறிப்பிட்டு, நகைச்சுவையாக அளித்த பதில், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments