மருந்து குடோனில் தீ விபத்து - பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்..!

0 2245

சென்னை அசோக் நகரில், ஒரே கட்டட வளாகத்தில் செயல்பட்டு வந்த இரு மருத்துவ உபகரண குடோன்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.

அசோக் நகர் 2-வது அவென்யூவில் இயங்கி வந்த விநாயகா எண்டர்பிரைஸ் மற்றும் திவ்யா பார்மா ஆகிய இரு நிறுவன குடோன்களில், காலை 8 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் 5 வாகனங்களில் வந்த 30 தீயணைப்புத்துறை வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனம், கார் உள்பட 3 வாகனங்கள் தீயில் சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments