ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி..!

0 2487

லடாக்கின் கார்கிலில், இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கார்கில் சென்ற பிரதமர் மோடி, வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

எல்லையை வீரர்கள் பாதுகாத்து வருவதால், நாட்டின் அனைத்து குடிமக்களும் நிம்மதியாக உறங்கமுடிவதாக குறிப்பிட்டார்.

வீரர்களின் தியாகம் நாட்டை பெருமிதப்படுத்துவதாக தெரிவித்த அவர், வீரர்களின் நலன்களை ஏற்று, எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக கூறினார்.

வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எதிரிகளை சமாளித்து வரும் இந்தியாவின் கெளரவம் உலக அளவில் உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், வீரர்களுடன் இணைந்து வந்தேமாதரம் பாடலை பிரதமர் மோடி பாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments