கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்: தனிப்படை போலிசார் தீவிர விசாரணை

0 3044

கோவை உக்கடத்தில், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. 

காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், ஜமேஷா முபின் என்ற நபர் உடல் கருகி உயிரிழந்தார்.கோட்டைமேட்டிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் சில பொருட்களை கைப்பற்றினர்.

அதேபோல், அவரது வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சனிக்கிழமை இரவு ஜமேஷா முபின் உள்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

ஜமேஷா முபின் வீட்டில், ஏற்கனவே தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அவர் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.

மேலும், ஜமேஷாவுடன் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தேகப்படும்படியான 7 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments