சட்ட விரோதமாக சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 15 பேர் கைது.. 18 சேவல், இரு சக்கர வாகனம், கார், பணம் பறிமுதல்!

0 2528

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டை சூதாட்டம் நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆலங்கண்டிபுதூரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அருகே உள்ள கொடுங்கரைபள்ளத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக 15பேரை கைது செய்த போலீசார் 18 சேவல், 11 இருசக்கர வாகனம், ஒரு கார் மற்றும் 36ஆயிரத்து 780 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments