டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா.. விராட் கோலி 82 ரன்கள் எடுத்து அபாரம்..

0 4357
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில், கடைசி நேரத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில், கடைசி நேரத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 159 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி அபாரமாக விளையாடியது. கடைசி வரை பரபரப்பாக நடந்த போட்டியில், ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த கோலி, இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments