கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்து அதிர்ச்சியையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது - அண்ணாமலை

0 3556

கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்து அதிர்ச்சியையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், மக்களிடம் ஏற்பட்ட அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சம்பவத்தில் மர்மம் விலக காவல்துறை உடனடியாக செயலாற்றும் என நம்புவதாக அவர் கூறினார்.

டி.ஜி.பி. மற்றும் காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் உடனடியாக விசாரணையைத் தொடங்கியதை வரவேற்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments