சவுதியில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை தமிழகம் கொண்டுவர கண்ணீர் மல்க பெண் கோரிக்கை

0 2880

சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த ஒரத்தநாட்டை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் உடலை, தமிழகம் கொண்டுவர, அரசு நடவடிக்கை எடுக்குமாறு, அவரது மனைவி கண்ணகி, வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயராஜ் சவுதி அரேபியாவில் கட்டட வேலை பார்த்துவந்த நிலையில், விரைவில் சொந்த ஊர் திரும்புவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சவுதி அரேபியா தூதரக அதிகாரிகள் போன் செய்து ஜெயராஜ் இறந்துவிட்டதாகவும், குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தது போன்ற போட்டோவையும் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, தனது கணவரின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமாறு, அவரது மனைவி கண்ணகி, 4 வயது குழந்தையுடன், வீடியோ மூலம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments