சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக தேர்வானார் ஜி ஜின்பிங்..!

0 2467

சீனாவின் அதிபராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் மூன்றாவது முறையாக தேர்வான ஜி ஜின்பிங், உலகிற்கு சீனா தேவைப்படுவதாக தெரிவித்தார்.

இன்று நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 69 வயதான ஜின்பிங் பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் நீடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக கட்சியின் மத்திய குழு அறிவித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜின்பிங், சீனாவின் வளர்ச்சிக்கு உலகம் தேவைப்படுவதாகவும், அதேபோல் உலகிற்கும் சீனா தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 40 வருடத்திற்கும் மேலாக சீர் திருத்தங்கள் செய்து, நீண்டகால சமுதாய ஸ்திரத்தன்மை மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments